உத்தேச தேர்தல் சீர்திருத்தம், தற்போதைய தேர்தல் முறைமை தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் பேச்சுவார்த்தை...!

ஷபீக் ஹுஸைன்- 
த்தேச தேர்தல் சீர்திருத்தம், தற்போதைய தேர்தல் முறைமை தொடர்பாக அரசியலமைப்புச் சீர்திருத்த நிபுணர் கரே வொலனுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீம் பேச்சுவார்த்தை.

அரசியலமைப்புச் சீர்திருத்த நிபுணர் கரே வொலன், வெள்ளிக்கிழமை நோர்வேக்கு புறப்பட்டுச் செல்லும் முன்னா் மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

உத்தேச தேர்தல் சீர்திருத்தம், தற்போதைய தேர்தல் முறைமையில் சிறுபான்மை மக்களுக்கு உள்ள காப்பீடுகளைக் குறைத்துவிடக் கூடாது என்பதை அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தினார். இரட்டை வாக்குச் சீட்டின் முக்கியத்துவம், விகிதாசார, தொகுதிவாரி தேர்தல் என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர், சர்வதேச விவகாரப் பணிப்பாளர் ஏ.எம். பாயிஸ், சட்டத்தரணி வை.எல்.எஸ். ஹமீத், இணைப்பாளர் லுவீ கணேஷதாசன் ஆகியோரும் பங்குபற்றிக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -