மலையக மக்களின் காணி உரிமையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டமும், கையெழுத்து வேட்டையும்..!

க.கிஷாந்தன்-
'பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கம், மலையக மக்களுக்கான காணி உரிமையை வழங்கக் கோரி, ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு வழங்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக, 24.07.2016 அன்று ஞாயிற்றக்கிழமை மாத்தளை நகரில், கையெழுத்து வேட்டையொன்று இடம்பெற்றதோடு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றது.

பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் மேற்படி ஆர்ப்பாட்டமும் கையெழத்து வேட்டையும் இடம்பெற்றது. மேற்படி நடவடிக்கையின் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் பொது மக்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, நகரங்களை இலக்கு வைத்து கையொப்பங்களை பெறும் நடவடிக்கையின் முதற்கட்டம் இங்கு மாத்தளை நகரில் நடைபெற்றதாக பெருந்தோட்ட சமூக காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் இணைப்பாளர் எஸ்.டி.கணேசலிங்கம் இதன்போது தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -