முஸ்லிம்களுக்கு நாம் இஸ்லாம் பாடம் தொடர்பில் டியுசன் எடுக்கின்றோம். இன்று முஸ்லிம்களுக்கு தீவிரவாதம் படித்துக் கொடுப்பதே நாட்டில் பிரச்சினையாகவுள்ளது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
முஸ்லிம்ம் தீவிரவாத அமைப்புக்களுடன் நாம் நேரடியாக பேசத் தயார். தற்பொழுது நல்லதொரு வாயில் திறபட்டுள்ளது. எம்முடனான விவாத்தை மக்காவிலோ மதீனாவிலோ அல்லது முகம்மது நபியின் அடக்கஸ்தலத்திலோ வைக்க நாம் தயார் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.