வெளிநாடு செல்லும் பணிப்பெண்களை தடுத்து நிறுத்தும் கிழக்கு முதல்வரின் நான்காவது நடவடிக்கை இன்று







கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பதவியேற்றதில் இருந்து இன்றுவரை கிழக்கில் இருந்து எந்தவொரு பெண்களும் வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது.. அதற்கான மாற்று நடவடிக்கைகளாக ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுகைத் தொழில் மற்றும் இதர நடவடிக்கைகளை மேர்கொள்ள வேண்டும் இதற்காக அனைத்து அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையில் நடைமுறைப் படுத்தப்படும் நடவடிக்கையின் நான்காவது கட்டமாக இன்று ஏறாவூரில் சுமார் 100 யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை வழங்கும் பொருட்டு சகோதரிகளுக்கு உதவுவோம் எனும் தலைப்பில் தொழில் பயிற்சி மையம் ஒன்று திறந்து வைக்கப் பட்டது.

குறித்த தொழிற் பயிற்ச்சி நிலையத்தின் திறப்பு விழாவில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இயங்கும் பிரபல சமூக சேவை அமைப்பான முஸ்லீம் கொடை நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் ஹாறூன் ரசீட் மற்றும் இணைப்பாளர் மிஸ்தார் அனீஸ் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி நிலையத்துக்கான உதவிகளைச் செய்தனர். இன்றைய நிகழ்வில் நூற்றுக்கணகான வேலைவாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் யுவதிகள் கலந்து கொண்டமை குறிபிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -