சீனாவில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையில் சிறப்பு விருது பெற்ற வைத்திய அத்தியட்சகர் கே.எல்.எம்.நக்பர்..!

அபு அலா -
ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பர் சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான 20 நாள் பயிற்சி பட்டறையில் கலந்துகொண்டு சிறப்பு விருதினை பெற்று இலங்கைக்கும் விசேஷடமாக கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதி முதல் இம்மாதம் 20 ஆம் திகதி வரை சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் நடைபெற்ற முகாமைத்துவ பயிற்சிப்பட்டறை மிக வெற்றிகரமாக முடித்துலிட்டு அங்கு டைபெற்ற இறுதிநாள் நிகழ்வின்போது ஆயுர்வேத வைத்தியம் தொடர்பாகவும்இ அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை தொடர்பாகவும் உரை நிகழ்த்திய பின்னர் வைத்தியசாலை தொடர்பான ஆவனங்களையும் கையளித்து வைத்தார்.

இந்த பயிற்சி நெறியை மிக வெற்றிகரமாக நிறைவு செய்த வைத்தியர் கே.எல்.எம்.நக்பருக்கு பயிற்சி நெறி முடிவில் சிறப்பு விருதும் வழங்கி வைக்கப்பட்டதும் விஷேட அம்சமாகும்.

இலங்கையிலிருந்து கலந்துகொண்ட ஐவரில் வைத்தியர் நக்பர் மட்டுமே கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதும் இவரே இக்குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்துச் செல்கின்றமையும் இந்தக் குழுவிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் என்பதும் குறித்த பயிற்சி நெறியில் கலந்துகொள்வதற்காக பல அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளைச் சேர்ந்த 50 வைத்தியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சீன பாரம்பரிய மருத்துவ முகாமைத்துவம் மற்றும் சுகாதார மருத்துவ தொழில்நுட்பம் தொடர்பிலான பயிற்சிப் பட்டறை நிறைவு செய்வதற்காக கிழக்கு மாகாண ஆளுநர்இ கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் சுதேச மருத்துவத் திணைக்களம் ஆகியன இணைந்து வைத்தியர் கே.எல்.எம். நக்பரை சிபார்சு செய்து அனுப்பியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -