மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரபா கணேசனுக்கு எம்மை விமர்சிக்க அறுகதை இல்லை - திகாம்பரம்

க.கிஷாந்தன்-
ந்த நாட்டின் மக்கள் வாழ்க்கை சுமையை எதிர்நோக்கும் அளவிற்கு கடன் சுமைக்கு ஆளாகி இருப்பது மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்க காலத்தில் பெறப்பட்ட கடன், அநாவசிய செலவு, மோசடி வர்த்தகம் போன்றவை ஆகும். இந்த நிலையில் வரிகளை அதிகரித்து கடன் சுமையில் இருந்து மீள் எழுவதற்கு இன்றைய நல்லாட்சி அரசாங்கம் பாடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இடம்பெற்ற கடை அடைப்பு போராட்டத்திற்கு உள்வாங்கப்பட்ட மலையக இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளிலிருந்து இவர்களை காப்பற்றவே நானும் மனோ கணேசனும் அவ்விடத்திற்கு சென்றோம். இதை கொச்சைப்படுத்தி பேசுவதற்கு பிரபா கணேசனுக்கு எத்தகைய அறுகதையும் இல்லை என நேரடியாக சாட்டுகிறார் அமைச்சர் பழனி திகாம்பரம்.

வட் வரிக்கு எதிர்ப்பு காட்டி கொழும்பு புறக்கோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு பிரபா கணேசன் விளக்கும் அளித்தது தொடர்பில் அமைச்சர் பழனி திகாம்பரத்திடம் நாம் 16.07.2016 அன்று வினாவிய போது, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் அமர வைத்தோம். அதன் பலனாக இன்று நான் மக்களுக்கு சேவையாற்ற கூடிய அளவில் அமைச்சரவை அந்தஸ்த்து பெற்றுள்ள அமைச்சு பதவியை பெற்றுள்ளேன்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷவிடம் இருந்த பிரபா கணேசன் எத்தகைய பொறுப்பை வகிக்கின்றார் என அமைச்சர் கேள்வி எழுப்பினார். ரணில் விக்கிரமசிங்கவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சமான்கள் வாங்க நான் கடைக்கு போக தேவையில்லை.

மஹிந்தவின் ஆட்சி காலத்திலும் நான் கடைக்கு போனதில்லை. என்னை நம்பி வாக்களித்த மலையக மக்களின் சந்ததியினர் தலைநகர் கொழும்பில் பறந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும் என வெளியான தகவல்களை அடுத்தே நான் அந்த இடத்திற்கு செல்லப்பட்டது.

அதேவேளை போராட்டம் நடத்துவதற்கு முதல் நாள் வர்த்தக சங்கத்தினர் ஊடாக எம்ம வரவழைக்க அழைப்பும் விடுத்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

இந்த போராட்டம் ஆனாது இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றாக நாம் கருதுகின்றோம். ஆனால் ஜக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தை இனிவரும் காலங்களில் கவிழ்க்க முடியாது என்பதை நான் உறுதியாக தெரிவிக்கின்றேன்.

அமைச்சர் மனோ கணேசனின் மீது எரிந்து விழும் பிரபா கணேசனுக்கு மக்கள் சேவகர்களாகிய எம்மீது அவதூறு பேசுவதற்கு இவருக்கு எந்த வகையிலும் அறுகதையில்லை என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -