எப்.முபாறக்-
திருகோணமலை - கந்தளாய், ஜெயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயற்சித்த நபரொருவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (02) கந்தளாய் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கந்தளாய், ஜெயந்திபுர பிரதேசத்தைச் சேர்ந்த் 36 வயது நபர் ஒருவருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பில் சூரியவௌ பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.