கிண்ணியா பிரதேச உப்பளத் தொழிலாளிகள் பாதிக்கப்படுவதாக விசனம்

கிண்ணியன்-

திருகோணமலை, கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கச்சக்கொடித்தீவு உப்பளத் தொழிலாளா்கள் பல்தவேறு வகையிலும் தாங்கள் பாதிக்கப்டுபடுவதாக விசனம் தெரிவிக்கின்றனா்.

இப் பிரதேசத்தில் 200 ஏக்கா் உப்பு வயல் காணப்படுகின்றது. 300 போ் இங்கு உப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்கள் சுமார் 15 வருட காலமாக இத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவே இவா்களுடைய வாழ்வாதாரத் தொழிலாகும்.

50 கிலோ கிராம் நிறையுடைய உப்பு மூடை ஒன்றை ஆரம்பத்தில் 500 ரூபாவுக்கு விற்பனை செய்வதாகவும் பின்னா் அது படி்ப்படியாகக் குறைவடைந்து 250 ரூபாவுக்குச் செல்வதாகவும் இவா்கள் கருத்து தெரிவிக்கின்றனா்.

இவா்களுக்கு விளைச்சல் அதிகரித்தாலும் விலையில் ஏற்படுகின்ற சரிவானது முதலாளிமார்களையே அதிக இலாபம் உழைப்பதற்கு சாதகமாக அமைகின்றது

மேலும் அறுவடை செய்யப்பட்ட உப்பை பாதுகாப்பாக களஞ்சயப்படுத்துவதற்கு களஞ்சியசாலை ஒன்று இல்லை என்றும் இவா்கள் கவலை தெரிவிக்கின்றனா். அதாவது அறுவடை செய்யப்படுகின்ற காலங்களில் கோடை மழை பெய்தால் அனைத்தையும் இழக்க வேண்டிய நிலை இவா்களுக்கு ஏற்படுகின்றது.

அத்தோடு உப்புக்கு அயடீன் கலப்பதற்கான அரச அனுமதியைப் பெற்றுத் தருமாறும் இவா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். அதாவது இவா்களிடம் குறைந்த விலையில் கொள்வனவு செய்யப்படுகின்ற உப்பானது தென் இலங்கைக்கு கொண்டு செல்லப்ட்டு அங்கு அயடீன் கலந்து விற்பனை செய்வதால் முதலாளிமார்களே அதிக ஈலாபம் ஈடு்டுவதாகவும் இதன் மூலம் உப்பு உற்பத்தியாளா்கள் நாள் முழுக்க கடும் வெயிலில் நின்று உழைத்தாலும் முன்னேற முடியாது வரியவா்களாகவே வாழ்ந்து வருவதாகவும். முதலாளிமார்கள் கடின உழைப்பின்றி இலகுவாக செல்வந்தா்களாக உயா்வதாகவும் உப்பு உற்பத்தியாளா்கள் விசனத்தைத் தெரிவிக்கின்றனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -