”இல்லற வாழ்க்கையை புரிந்துணர்வுடன் ஒருமுகப்படுத்தப்பட்ட முன்னெடுத்துச் செல்வது தொடர்பான கருத்தரங்கு”

ஏ.எஸ்.எம்.ஜாவித்-

திருமணமான மற்றும் திருமணமாகாத ஆண்கள், பெண்கள் திருமணத்தின் பின்னர் எவ்வாறு தமது இல்லற வாழ்க்கையை புரிந்துணர்வுடன் ஒருமுகப்படுத்தப்பட்ட வகையில் முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை இன்று (17) களுபோவிலவில் உள்ள சபா நிலையத்தினால் அதன் தலைவர் திருமதி அமீனா முஸ்தபா தலைமையில் இலவசமாக இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இக்கருத்தரங்கில் பர்மன் நிஷார், நத்வி பகுவுத்தீன், ஹுஸைன் புஹாரி, ஸஹ்னவாஸ் முஹைடீன், பஹ்டியா சலீம், நஸீர் அப்துல் கனி, றுஸ்லா இஸ்மாயில் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்ட கருத்தரங்கில் நூற்றும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமுகத்தில் திருமணத்தின் பின்னர்; அவர்களுக்கிடையில் புரிந்துணர்வு, விட்டுக் கொடுப்புக்கள் மற்றும் திருமணத்தின் பின்னரான வாழ்க்கை முறைமைகளை எவ்வாறு இருவரும் இணைந்த கொண்டு செல்வது என்பன தொடர்பான பூரண அறிவின்மையால் அவர்களின் குடும்ப வாழ்வில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு அவர்கள் குறுகிய காலத்தினுல் பிரிவதற்கு வழிவகுத்து வருகின்ற நிலையில் இவ்வாறான கருத்தரங்குகள் முஸ்லிம் ஆண், பெண்களுக்கு இன்றியமையாத ஒன்றாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -