பெற்றோர்களின் ஒத்துழைப்புகளுடன் களைகட்டும் வீதிவிபத்துக்கள்:குமுறுகிறார் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

எம்.வை.அமீர் -

முஸ்லிம்களின் புனித பெருநாள் தினமான 2016-07-06 ஆம் திகதியன்று சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் சட்டவிரோதமாக மோட்டர் பைசிகிள்களை ஓட்டிச்சென்றவர்கள் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவால் நிறுத்தப்பட்டு, அவர்கள் ஓட்டிச்சென்ற பைசிகிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த பைசிகிள்களை ஓட்டிச்சென்றவர்களில் அநேகர் சிறுவர்கள் என்றும், அவர்களின் தாய் தந்தையர்களை அழைத்துவருமாறு கூறியுள்ளதாகவும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எம்.பிரியலால் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் வாகனங்களை ஓட்டிச்செல்வதனாலேயே அநேகமான வீதி விபத்துக்கள் ஏற்படுவதாகவும் விபத்துக்களை தடுப்பதற்காக பொலிசார் எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கின்ற போதிலும் வாகன ஓட்டுனர்கள் சட்டவிரோதமாக வாகனங்களை செலுத்துவதனை தவிர்ப்பதனூடாகவே விபத்துக்களை தடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

தங்களது பிள்ளைகள் மீதுள்ள அன்பின் காரணமாக பெற்றோர், மோட்டர் பைசிகிள் உள்ளிட்ட வாகனங்களை தங்களது பிள்ளைகளுக்கு வழங்குவது அவர்களது பிள்ளையின் உயிருக்கும் பாதசாரிகளுக்கும் அச்சுறுத்தலாக மாறுவதாகவும் தெரிவித்தார்.

எனவே தங்களது பிள்ளைகளிடம் சட்டவிரோததாக ஓட்டுவதற்கு வாகனங்களை எதனையும் வழங்க வேண்டாம் என்று மிக வினயமாக கேட்டுக்கொள்வதாக எச்.எம்.பிரியலால் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -