மருதமுனையின் கல்வி அபிவிருத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்..!

ஏ.எல்.எம்.ஸினாஸ்-
ருதமுனையின் கல்வி அபிவிருத்தியில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டிய காலம் எற்பட்டிருக்கின்றது. பரீட்சை பெறுபேறுகள் அதிகரிக்கப்பட வேண்டும். இல்லையெனில் கிராமத்தின் கல்விவளர்ச்சி பாதிக்கப்படும். மருதமுனையின் கல்வி அபிவிருத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்பு ரீதியாக முன்னெடுக்கப்பட வேண்டும். என சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் எம்.எப்.ஹிபத்துல் கரீம் தெரிவித்தார்.

மருதமுனை கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம்(SESEF) கல்முனை வலயக் கல்வி அலுவலகம், முஸ்லிம் கோட்டக் கல்வி அலுவலகம் ஆகியவற்றின் ஆலோசனை , வழிகாட்டலுடன் மருதமுனையின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்த விஷேட கூட்டம் மருதமுனை பொது நூலக வளநிலைய கேட்போர் கூடத்தில் (19-07-2016) நடைபெற்றது. இங்கு தலைமைதாங்கி உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

அமையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.வலீதின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றகையில்; 

இன்று எமது பிரதேசத்தின் கல்வித் துறை அபிவிருத்தி செய்யவேண்டிய நிலையிலே காணப்படுகின்றது. தரம் ஐந்து புலமைப்பரிசில் , க.பொ.த.சாதாரண தர, உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வளர்ச்சியை நோக்கி அபிவிருத்தி செய்யவேண்டும். பிரதேசத்தின் பாடசாலை அபிவிருத்திச் சபை, பழைய மாணவர் சங்கங்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துறை சார்ந்த கல்வியலாளர்கள் ஆகியோருடன் கலந்தாலோசனை செய்து பிரதேசத்தின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்யக் கூடிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். அதன் அடிப்படையிலேயே இன்று உங்களை சந்திக்கின்றோம். மருதமுனை பிரதேசம் கல்விமான்கள் நிறைந்த பிரதேசமாகும். துறைசார்ந்த கல்வியலாளர்கள் இது பற்றி ஆராய வேண்டும்.

மருதமுனையில் இருக்கின்ற கல்வி வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டால் கல்வித் துறையை இன்னும் பன்மடங்காக அபிவிருத்தி செய்ய முடியும். இந்த விடையம் பற்றி ஆராய்வதற்கும் முன்னெடுப்பதற்கும் “கல்வி மற்றும் சமூக வலுவூட்டலுக்கான ஒத்துழைப்பு அமையம்” செயற்படும். மருதமுனையின் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தியில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஒழுக்கம் குறைந்து செல்கிறது. இது கல்வியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது என்றார்.

இந்த கூட்டத்தில் அமையத்தின் ஆலோசகர்களான கிழக்கு மாகாண சபையின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியில் துறை பீடாதிபதி கலாநிதி எஸ்.எம்.ஜூனைத்தீன், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுனுல் நஜீம், உதவிக் கல்விப் பணிப்பாளர் ஜிஹானா ஆலிப், கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.சக்காப், விரிவுரையாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாளர்கள் உட்பட அமையத்தின் சமூக வலுவூட்டலுக்கான பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், நிதி பணிப்பாளர் எம்.எப்.எம்.மர்சூக் ஆகியோரும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அமையத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -