தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறுகைத்தொழில் ஊக்குவிப்புக் குழு கிழக்கு முதல்வர் சந்திப்பு

ஊடகப் பிரிவு-

தென்னிந்திய தமிழ் நாட்டைச் சேர்ந்த சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்கத்தின் தலைவர் சி.முத்துசாமி தலைமையிலான மேலதிகாரிகள் குழு இன்று காலை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர்.
மேற்படி சந்திப்பில் கிழக்கு மாகாணத்தில் கல்வியை இடை நடுவில் விட்டு வெளிநாடுகளில் பணிப்பெண்களாகவும், துப்பரவுத் தொழிலாளர்களாகவும் இருக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்பினை ஏற்படுத்திக்கொடுக்க கிழக்கில் கைத் தொழிற்பேட்டைகளை உருவாக்குதல் சம்மந்தமான நீண்டதொரு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் விரைவில் கிழக்கில் பாரிய கைத்தொழிற்பேட்டை ஒன்றினை உருவாக்கும் ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்போம் என்று தமிழ் நாடு சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு சங்க அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இச்சந்திப்பில் தமிழ் நாட்டிலிருந்து சீ.பாபு, சீ.கே.மோகன், எஸ்.ரவிச்சந்திரன், கே.மாரியப்பன், வீ.எஸ்.மணிமாறன், எஸ்.கணேஸ், எஸ்.அசோக், வீ.நடராஜன் ஆகிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். குறித்த இச்சந்திப்பினை இலங்கை, இந்திய தொடர்பாளர் மனவை அசோகன் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -