காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி, புணர்நிர்மானம்


M.T. ஹைதர் அலி-


ட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள காத்தான்குடி தள வைத்தியசாலையில் இரத்த வங்கி பிரிவு புணர்நிர்மானத்திற்காக 67 இலட்சம் ரூபாவும், வைத்தியர்கள் தங்குமிட விடுதி அமைப்பதற்கு 1 கோடியே 8 இலட்சம் ரூபாவும் கௌரவ. ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளிக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சினால் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இக்கட்டடங்களுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2016.08.02ஆந்திகதி (செவ்வாய்க்கிழமை) காலை 09.00 மணியளவில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் பங்குபற்றுதலுடன் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோரினால் அடிக்கல் நடப்படவுள்ளது.


காத்தான்குடி தள வைத்தியசாலையை அபிவிருத்தி செய்கின்ற தொடர் முயற்சியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கமைவாக மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அஹமட் அவர்கள் இந்நிதி ஒதிக்கீடுகளை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதற்கான ஒப்பந்தம் பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -