இலங்கை பாராளுமன்றத்தினை வரைந்தவா் ஒரு முஸ்லீம் - இவர் ஆசியாவிலே தலைசிறந்த ஓர் கட்டிடக்கலைஞா்

அஷ்ரப் ஏ சமத்-
சியாவிலே தலை சிறந்த கட்டிடக் கலைஞா் மறைந்த தேசமாண்ய ஜிப்ரி வாவா (இலங்கை பாராளுமன்றத்தினை வரைந்தவா்) பரம்பரையில் அவா் ஒரு முஸ்லீம் அவரின் மூத்தவாப்பா ஒர் முஸ்லீம் அவரின் தாய் ஒரு பிராண்ஸ் நாட்டினைச் சோ்ந்தவா், அவருக்கு ஒரே ஒரு சகோதரி பிராண்சில் இருந்தாா் அவரும் இறந்துவிட்டாா், ஜிப்றி வாவா திருமணமுடிக்கவில்லை, அவருக்கு வாரிசுகள் இல்லை. அவாின் கலை வண்னத்தில் வரைந்த வாடகை வீடு கொள்ளுப்பிட்டியில் அல்பட் கார்டன் டேடன் வைத்தியசாலை வளவில் இருந்த வீட்டிலேயே அவா் தனது கட்டிடக் கலைகலை வரைந்தாா். இந்த வீட்டில் இருந்த சகல கட்டிடப் பொருட்களையும் அகற்றி அதனை அப்படியே லுநுகங்காவில் பொருத்தியுள்ளோம். ஒவ்வொரு அரைகளும் ஒரு நாளைக்கு 200 டொலருக்கு வெளிநாட்டு உல்லாசப்பிரயாணிகளுக்கு வாடகைக்கு விடப்படுகின்றது. அவரது பங்களாவான லுனுகங்கா, பேன்தொட்டையில் 50 ஏக்கா் நிலப்பரப்பில் உள்ளது. அதனை அவரின் கட்டக்கலைஞா்களாக தொழில்புரிந்தவா்கள் இணைந்து ஜிப்ரி பவாவா பரிபலான சபையினா் பரிமாறித்து வருகின்றனா்.

என நேற்று (23) லுனுகங்க உலகில் தலைசிறந்த கட்டிடக் கலைஞா் ஜிப்ரி வாவா வாழ்ந்த வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டில் ஜப்ரி வாவா பரிபாலான சபையின் தலைவா் தெரிவித்தாா்

தேசமாண்ய ஜிப்ரி வாவாவின் கட்டக்கலை வரைபுகளை கட்டிங்கள், வீடுகள், பாராளுமன்றம், பொன்தோட்ட, ஹோட்டல், செரண்டிப் கோட்டல் போன்ற பல்வேறு கட்டடிங்கள் வரைந்தாா் அவா் இந்த நாட்டின் இயற்கைகளை பயண்படுத்தி கட்டிடஙக்ளை வரைந்து நிர்மாணித்தார். அவரது கலைகளை உலக நாடுகளில் உள்ள ஜப்பான், இந்தியா, ஜேர்மண், பிராண்ஸ், இந்தோனோசியா, மலேசியா போன்ற நாடுகளில் கட்டக்லைத்துறையில் பயிலும் மாணவா்கள் இங்கு வந்து தங்கி நின்று அவரது வரைபடங்கள் கட்டிடங்களை படிக்கின்றனா். அதனை நேரடியாகச் சென்று பாா்வையிட்டு அவரது நாடுகளில் அதனை செயல்படுத்துகின்றனர். பல்கலைக்கழங்கங்களில் பரீட்ச்சைக்கு அறிக்கை சமா்பிக்கின்றனா். அவரிடம் கற்ற மாணவா்கள் இன்று உலக நாடுகளில் பரந்து பல கட்டிடக் கலைஞா்களாக தொழில் புரிகின்றனர்.

2016-17 ஆம் ஆண்டுக்காண இலங்கை கட்டிடக்லைஞா்களுக்கு 10 இலட்சம் ருபா பரிசாகக் கொண்ட ஜிப்ரி வாவா விருது வழங்கப்பட உள்ளது. சிறந்த கட்டிங்களை உருவாக்கிய கலைஞா்கள் விண்ணப்பிக்க முடியும். ஜிப்றி வாவாவின் 97வது பிறந்த தினமான 27 ஜூலை விருது வழங்கப்படும். கடந்த 3 வருட காலத்தில் வரைந்த கட்டிடங்கள் இந்த விருதுக்கு விண்னப்பிக்க முடியும். பென்தோட்டையில் லுனுகங்காவில் உள்ள ஜிப்ரி வாவா பங்களாவில் உள்ள அலுவலகத்தில் சென்று விண்னப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு வந்து அவரது கலைகளை பாா்வையிடலாம். தொலைபேசி 0344287056 அல்லது 0344287151.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -