எம்.வை.அமீர்-
அண்மையில் சில உள்ளூர் பத்திரிக்கைகளிலும், இணையத்தளங்களிலும் தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லாஹ் தொடர்பில் அவர் பாராளமன்றம் செல்லப்போவதாகவும் அமைச்சர் பௌஸி தனது பதவியை துறந்து அதற்கான இடத்தை வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வந்தன பின்னர் அவ்வாறானதொரு நிலை இல்லை என்றும் குறித்த பாராளமன்ற பதவிக்கு அதாவுல்லாஹ் தகுதியற்றவர் என்ற அடிப்படியிலும் செய்திகள் உலாவந்தன.
குறித்த செய்திகள் தொடர்பில் நாபீர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
வாக்குவங்கிகளுடன் நோக்கும்போது அதாவுல்லாஹ்வுக்கு என தனியானதொரு வாக்குவங்கியுள்ளதை அவரது அரசியல் எதிரிகளும் அறிவர் அமைச்சர் பௌஸிக்கு அவ்வாறு இல்லை அவர் ஒரு பெரும்பான்மை கட்சியுடன் இணையும்போதுதான் அந்தக் கட்சியின் பெயரால் ஒரு வாக்கேனும் பெறமுடியும்.
அம்பாறை மாவட்டம் பல்வேறு அரசியல்வாதிகளை கண்டுள்ளது அவர்களில் தற்போது ஆட்சியில் இருப்பவர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அதாவுல்லாஹ் அம்பாறை மாவட்டத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் செய்த அபிவிருத்திகள் வானுயர்ந்து நிற்கும்.
முன்னாள் அமைச்சர் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் விசேடமாக கல்முனையை எடுத்துக்கொண்டால் அதிலும் சாய்ந்தமருதில் பாரியளவில் அபிவிருத்திகளை செய்தது யார்? சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை, லிப்ட் வசதிகளுடன் கூடிய சாய்ந்தமருது பிரதேச செயலகம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் தொழில்நுட்ப காரியாலயம் பாலம் வீதிகள் என நீண்டுகொண்டே செல்லும் இவ்வாறு ஒவ்வொரு பிரதேசத்திலும் அபிவிருத்திகள் ......இப்போது உள்ளவர்கள் என்ன செய்துள்ளார்கள்?
சிலர் ஓரிரு தையல் மெஷின்களை வழங்கிவிட்டு தாங்கள் பாரிய அபிவிருத்திகளை செய்வதாக வில்டப் காட்டுகிறார்களே தவிர ஒன்றும் செய்ததாக இல்லை.
வேலைவாய்ப்பு என்ற விடயத்தை எடுத்துக்கொண்டால் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்குப் பின்னர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் அள்ளிக்கொடுத்தார் இவைகளை யார் அறிவர்.
அதாவுல்லாஹ் அமைச்சராக இருந்து இவ்வாறெல்லாம் அபிவிருத்திகள் செய்கின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் வன்னி அமைச்சரும் அதிகாரத்தில்தான் இருந்தார்கள் என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
தேசிய காங்கிரஸின் தலைவர் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் வீழ்ச்சிக்கு பிரதான காரணமாக நாபீர் பவுண்டேஷன் கருதுவது அவர் செய்தவைகளை ஊடகங்கள் பிரபல்யப்படுத்தவில்லை என்றும் அவர் பெருமையை விரும்பவில்லை என்பதும்தான்.
மட்டக்களப்பில் ஒரு ஹிஸ்புல்லாஹ்வும் அக்கரைப்பற்றில் ஆதாவுல்லாஹ்வும் இல்லாது போயிருந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பின்னனடைவை இப்பிராந்தியங்கள் சந்தித்து இருக்கும்.
இவ்வாறு எல்லாம் நாபீர் பவுண்டேஷன் குறிப்பிடுவதைக் கொண்டு அதற்கும் கலர் பூசிவிடும் ஆட்களும் இல்லாமல் இல்லை நாங்கள் கேட்பது அவர்களைப்போல் நீங்களும் பாரிய திட்டங்களை செய்யுங்களேன் என்பதுதான். அப்போது நாங்கள் உங்களையும் பாராட்ட தவற மாட்டோம்.
ஊடகப் பிரிவு
அல்ஹாஜ் உதுமான்கண்டு நாபீர்
தலைவர், நாபீர் பவுண்டேஷன்
முகாமைதத்துவ பணிப்பாளர், ECM PVT (Ltd)