வட்டிப் பிரச்சினை - ஐந்து பிள்ளைகளின் தாய் பக்கத்து வீட்டுப் பெண்ணால் குத்திக் கொலை

எப்.முபாரக்-
பெண்ணொருவரின் கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐந்து பிள்ளைகளின் தாயொருவர், வியாழக்கிழமை (14) இரவு 8.45 மணியளவில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம், திருகோணமலை சேனையூர் பகுதியில் வியாழக்கிழமை (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தப் பெண், சம்பூர்- சேனையூர் பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தாயாரான இளங்குமார் சாந்தமலர் (41 வயது) என, பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

கத்திக்குத்துக்கு இலக்கான குறித்தபெண், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மகளுக்கு இரண்டு இலட்சம் ரூபாயை, வட்டிக்குக் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அந்தப் பணத்தை மீளச் செலுத்தாமையால் அதுதொடர்பில், பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து, பக்கத்துவீட்டுப் பெண், ஒவ்வொரு நாளும் திட்டிக்கொண்டே இருந்துள்ளார்.

இந்நிலையே இவ்விருவருக்கும் இடையில் குரோதம் வளரக் காரணமானது. இந்த விவகாரம் தொடர்பில் இன்றைய தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையிலேயே, இந்தக் கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -