இன்று உலக முஸ்லிம்கள் புனித நோன்புப்பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் வாகன விபத்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
சற்று முன்னர் ஒலுவில் சீரா தொழிற்சாலைக்கு முன்னால் இரு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்தில் மரணம் இன்னும் ஒருவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரணித்தவர் ஒலுவில் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் விபத்துக்கு காரணமான அடுத்த மோட்டார் வாகனத்தை செலுத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மோட்டார் வாகனத்தை பொலிசார் எடுத்துச் சென்றுள்ளதாகவும் இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணையை அக்கரைப்பற்றுப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.