அனைத்துப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் அடையாள வேலை நிறுத்தம்..!

சலீம் றமீஸ்-
ல்கலைக் கழக ஊழியர்களின் சம்பள முரன்பாடு, ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல கோரிக்கைகளை முன் வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் தொடர்ச்சியாக இரண்டு தினங்கள் அடையாள வேலை நிறுத்தத்தினை 2016.07.13 மற்றும் 2016.07.14 ஆம் திகதிகளில் மேற் கொள்ளவுள்ளதாக அனைத்துப் பல்கலைக் கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் இணைத் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

இதன் படி பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக் குழுவின் நிருவாகத்தின் கீழ் இயங்கி வரும் அனைத்து பல்கலைக் கழகங்களையும், உயர்கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் 24 தொழிற்சங்கங்களின் ஒன்றிணைப்பான பல்கலைக் கழக தொழிற் சங்க கூட்டமைப்பானது கடந்த 2016.06.06 ஆம் திகதி நடாத்திய சிறப்புக் கூட்டத்தில் நீண்ட நேர ஆலோசனைகளின் பின்னர் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டதற்கமைவாக இந்த வேலை நிறுத்தம் நடைபெறவுள்ளதாகவும் , இதற்கான தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 2016.07.27 ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியான வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவாக தென்கிழக்குப் பல்கலைக் கழக கல்வி சாரா ஊழிகளும் குறிப்பிடப்பட்ட இத்தினங்களில் முழு நாள் அடையாள வேலை நிறுத்தங்களை மேற் கொள்ளவுள்ளதாகவும் தென்கிழக்குப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் வை.முபாறக் தெரிவித்தார்.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, பல்கலைக் கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்களின் கடமையாற்றும் ஊழியர்கள் இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதுடன், மேற்படி கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 2016.03.31 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்ததினை பல்கலைக் கழக ஊழியர்கள் மேற் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -