எம்.எம்.ஜபீர்-
சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள அன்னமலை விவசாய போதனாசிரியர் பிரிவில் கிழக்கு மாகாண விவாசய திணைக்களத்தினால் பீ.எஸ்.டி.ஜீ திட்டத்தில் மத்தியமுகாமில் செய்கை பண்ணப்பட்ட பாசிப்பயறு அறுவடை விழா இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு அன்னமலை விவசாய போதனாசிரியர் என்.ஜெகதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற அறுவடை விழாவுக்கு விவசாயத் திணைக்களத்தின் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எம்.பீ.எம்.இர்சாத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆராம்பித்து வைத்தார்.
இதில் மல்வத்தை விவசாய போதானசிரியர் ஏ.ரசீம், காரைதீவு விவசாய போதனாசிரியர் ஆர்.குணந்தராசா, அலுவல உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது பாசிப்பயறு செய்கை மேற்கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் உற்பத்தி செலவு, வருமாணம் தொடர்பாக விவசாயிகளுக்கு போதனாசிரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.