ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் விசேட பேச்சுவார்த்தை ஒன்று அவுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடந்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைச்சர்கள் மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா, அரசியல் பேச்சுவார்த்தை ஒன்று நடப்பதாகவும் மேலதிக விபரங்களை பின்னர் அறிவிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.