புதிய யாப்பில் கரையோர மாவட்டம் உள்வாங்கப்படாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் - பிரதி அமைச்சர் ஹரீஸ்

அஹமட் எஸ்.முகைதீன், ஹாசிப் யாஸீன்-
ரசியல் அமைப்பு மாற்றத்தின்போது அம்பாறை மாவட்டத்தில் புதிதாக கல்முனை கரையோர மாவட்டம்உள்வாங்கப்படாவிட்டால், தான் பிரதி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதுடன் பாராளுமன்றத்தில் புதியஅரசியமைப்புக்கான வாக்கெடுப்பின்போது எதிர்த்து வாக்களிப்பேன் என விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ்தெரிவித்தார்.

கல்முனை புதிய நகர அபிவிருத்தி தொடர்பான கூட்டம் திங்கட்கிழமை (11) கல்முனை மாநகர சபைஅலுவலகத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதேமேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் 10 வீதமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இந்த அம்பாறை மாவட்டத்தில் 70 வீதமானவர்கள்தமிழ் பேசும் மக்களாக காணப்படுகின்றனர். அம்பாறை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இந்த மக்கள் சிங்களமொழி தெரியாமல் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த மக்கள் என்ன பாவப்பட்ட ஜென்மங்களா?.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரைவிட மேலதிக அரசாங்க அதிபர் சேவை முதிர்ச்சியானவர் உள்ளார்.. பெரும்பான்மையாக தமிழ் பேசும் சமூகமுள்ள ஒரு மாவட்டத்தில் எம்மால் தமிழ் பேசும் ஒரு அரசாங்க அதிபரை பெறமுடியாதுள்ளது. இவற்றுக்கெல்லாம் ஒரு தீர்வாக கரையோர மாவட்டம் அமையவேண்டும்.

அரசு தற்போது யாப்பு திருத்தம் சம்பந்தமாக முன்னுரிமை கொடுத்து செயற்படுகின்றது. இந்த கால கட்டத்தில் நாங்கள் வெறுமனே பார்வையாளர்களாக இருக்க முடியாது. எமது ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகம் சார்ந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்சியாகும். அந்த வகையில் எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை இச்சந்தர்ப்பத்தில் நாங்கள் கதைக்க வேண்டும். நாங்கள் இந்தக் கட்சியின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் எமது சமூகம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றனவோ அவற்றை செய்வோம். வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த வேண்டுமாக இருந்தால் அவற்றையும் செய்வோம். 

அரசியல் யாப்பு திருத்தத்தில் இனப்பிரச்சினைக்கான சமஷ்டி தீர்வு தொடர்பாக வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாக பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு பேசமுடியுமாக இருந்தால் ஏன் இந்த அம்பாறை மாவட்டத்தில் உள்ள 70 வீதமான தமிழ் பேசும் மக்களின் இந்த கரையோர மாவட்டம் தொடர்பாக பேசமுடியவில்லை.

கரையோர மாவட்டம் பற்றி யாப்பு தொடர்பான எந்த கலந்துரையாடல்களிலும் அரசாங்கம் சார்ந்த எந்த ஒரு தலைவரோ, எந்த ஒரு சட்டநிபுணரோ பேசவில்லை. இது மிகுந்த மன வேதனையைும் கவலையையும் தருகின்றது. அரசியல் யாப்பு திருத்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நானும் கலந்து கொண்டு இது தொடர்பாக விளக்கத்தை கொடுக்க இருக்கின்றேன். அதை ஏற்றுக் கொள்ளவிட்டால் நான் நிச்சயம் அந்த யாப்புக்கு ஆதரவு வழங்கவும் மாட்டேன் அத்தோடு தொடர்ந்தும் இந்த அரசில் பிரதி அமைச்சராக இருக்கவும் மாட்டேன்.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக துறைமுக நகரத்தை உருவாக்கி அதற்கென தனி மாவட்ட அந்தஸ்தும் தனிச் சட்டமும் உருவாக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முடியுமாக இருந்தால்,கரையோர மாவட்டம் என்பது தனி மாகாணமும் இல்லை, தனி நாடும் இல்லை இது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நிர்வாக அலகுக்கான மாவட்டம் என்பதை ஏன் பிரதமரும் ஜனாதிபதியும் இணைந்து அறிவிக்க முடியாது. கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்குமாக இருந்தால் அம்பாறை மாவட்டத்தில் ஒரு பாரிய போராட்டம் ஒன்று வெடிக்கும்.

இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் முஸ்லிம்களின் நிலை மிகவும் கேள்விக்குறியாக மாறி வருகின்றது.எமது ரசூல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது களங்கம் ஏற்படுத்துகின்ற அளவுக்கு ஞானசார தேரரின்அட்டகாசங்கள் தலை விரித்தாடுகின்றன. எமது ரசூல் தூசிக்கப்பட்டமை தொடர்பில் நாட்டின் ஜனாதிபதியோ,பிரதமரோ ஒரு கண்டன அறிக்கையை கூட வெளியிட்டு முஸ்லிம்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லவில்லைஎன்பதையிட்டு நான் கவலையடைகின்றேன்.

இந்த நிலை நீடிக்குமாயின் கடந்த ஆட்சியாளர்கள் மீது முஸ்லிம்கள் வெறுப்புக் கொண்டு அவர்களுக்கு எதிராககிளர்ந்து எழுந்தது போன்றதொரு சூழ்நிலை ஏற்படலாம் என்று இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்குநான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -