ஜனாதிபதியின் ஆலோசகர் அசாத் சாலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் பேரவை தலைவர் ஆகியோர் தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு பொதுபல சேனா அமைப்பு சவால் விடுத்துள்ளது. முஸ்லிம் பேரவை பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பிய கடிதத்தை இறைத்தூதர் முஹம்மது நபி ஊடாக அல்லாவுக்கு அனுப்புமாறு ஞானசார தேரர் கூறியிருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த அசாத் சாலி, முஹம்மது நபியை அவமதித்தவர்களை கொன்று மரணக்கவும் தயார் எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பொதுபல சேனா மேற்கண்டவாறு கூறியுள்ளது.
அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், கடிதத்தின் பிரதியை அல்லாவுக்கு அனுப்புமாறு கூறியதால், அல்லாவுக்கு எப்படி அவமதிப்பு ஏற்படும் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு கேட்டுள்ளது.
அத்துடன் புனித குர் ஆன் மற்றும் அல்லா தொடர்பில் விவாதத்திற்கு எந்த சந்தர்ப்பத்திலும் தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை அரபு நாடு அல்ல. எந்த விடயம் குறித்தும் விமர்சிக்கவும் பேசவும் இங்கு சுதந்திரம் உள்ளது. இதற்கு அல்லாவோ, புனித குர் ஆன் ஆகியனவும் விதிவிலக்கல்ல எனவும் பொதுபல சேனா கூறியுள்ளது.