பாதயாத்திரையால் உடல் எடையை குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது - ஹிருணிகா

ன்றிணைந்த எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள பாதயாத்திரையால், பாதயாத்திரையில் ஈடுபட்டுள்ளவர்களின் உடல் எடையை மாத்திரமே குறைக்க முடியுமே தவிர அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

கண்டியிலிருந்து கொழும்பை நோக்கிய குறித்த பாதயாத்திரையால் எதுவும் மாற்றமடைய போவதில்லை. அதற்காக அரசாங்கம் பீதியடைவதற்கும் ஒன்றுமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

கொலன்னாவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று (30) கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறித்த பாதயாத்திரையால் ஜனாதிபதியோ பிரதமரோ தங்களது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ள போவதில்லை. இன்னும் 5 வருடங்களுக்கு தேசிய அரசாங்கம் பிளவுப்பட போவதுமில்லை.

எனவே குறித்த பாதையாத்திரை தொடர்பில் பீதியடைவதற்கு ஒன்றும் இல்லையென தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -