புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு யாழில் சிநேக பூர்வ உதைப்பந்தாட்ட போட்டி...!

பாறுக் ஷிஹான்-
புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் யாழ் ஐக்கிய விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய உதைப்பாந்தாட்ட போட்டி நேற்றைய தினம் வியாழக்கிழமை (7) மாலை ஜின்னா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டிக்கு பிரதம விருந்தினரான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அம்பியபிடிய, மற்றும் யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி விரசிங்க ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதில் குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகம் ,யாழ் ஐக்கிய விளையாட்டு கழகம் என்பன மோதியது.

ஆனால் இறுதியாக போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டி நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வமான போட்டியாகும்.

இந்த போட்டியில் சிறந்த வீரருக்கான விருதினை யாழ் ஐக்கிய விளையாட்டு கழக உறுப்பினர் உசைன் பெற்றுக்கொண்டார்.

இதன் போது இந்த நிகழ்விற்கு யாழ் மாநகர முன்னாள் உறுப்பினர் சரபுல் அனாம்,சமூக சேவையாளர் கே.எம் நிலாம், கிராம சேவகர் ஆர்.சல்பீர், யாழ் பொலிஸ் நிலைய உப பரிசோதகர்களான சிறி கஜன், சொருபன் சூரியகுமார், ஜயேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -