காத்தான்குடி: சிறுமிக்கு சூடு வைத்த மும்தாஜை தலாக் செய்தார் கணவர்...!

சிறுமிக்கு சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய மும்தாஜ் மனைவியை மௌலவி மஜீத் றப்பாணி தலாக் செய்து நேற்று (18) திங்கட்கிழமை பிரிந்துள்ளார் என காத்தான்குடி காழி நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது முதல் மனைவி மூலம் தனக்கு கிடைத்த பிள்ளைக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதோடு தனக்கு கஷ்டங்களை ஏற்படுத்திய தனது இரண்டாவது மனைவியான மும்தாஜ் என்பவரை விட்டும் தலாக் செய்து பிரிந்து கொள்ளப்போவதாக காத்தான்குடி காழி நீதி நீதிமன்றத்தில் தலாக் வழக்கொன்றை மஜீத் றப்பாணி வைத்திருந்தார்.

இந்த வழக்கின் பிரகாரம் நேற்று திங்கட்கிழமை தனது இரண்டாவது மனைவியான மும்தாஜ் என்பவரை மௌலவி மஜீத் றப்பாணி தலாக் செய்து பிரிந்துள்ளார்.

மௌலவி மஜீத் றப்பாணியின் 10 வயது மகளுக்கு அவரது இரண்டாவது மனைவி கரண்டியினால் சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் 13.3.2016 அன்று மஜீத் றப்பாணி மற்றும் அவரது இரண்டாவது மனைவி மும்தாஜ் ஆகிய இருவரும் காத்தான்குடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேல் விளக்க மறியலில் இருந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தனது பிள்ளைக்கு கரண்டியினால் சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெரிவித்து இரண்டாவது மனைவி மும்தாஜை மௌலவி மஜீத் றப்பாணி பிரிந்து தலாக் சொல்லியுள்ளார்.

சூடு வைக்கப்பட்டு பெரும் காயங்களுக்குள்ளான குறித்த சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்று தற்போது கொழும்பிலுள்ள அவரது உறவினர் (சிறுமியின் பெரியம்மாவின்) பராமரிப்பில் இருந்து வருகின்றார்.

இதே நேரம் இது தொடர்பான வழக்கு எதிர் வரும் 2.8.2016 அன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
சாஜில் நியூஸ்- 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -