ஆற்றில் குப்பைகளை கொட்டுவதனால் நீர் மாசடைகின்றது - மக்கள் விசனம்

க.கிஷாந்தன்-
நுவரெலியா பிரதேச சபையின் கீழ் உள்ள அக்கரபத்தனை மன்றாசி நகரத்தில் சேகரிக்கபடும் குப்பைகளை மன்றாசி நகரத்தினை அண்மித்து காணப்படும் பாலத்தின் அருகில் கொட்டப்படுகின்றது.

இங்கு கொட்டப்படும் கழிவுகள் அனைத்தும் ஆகுரோயா ஆற்றில் கலக்கப்படுவதால் ஆற்று நீர் மாசடைவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்கள் குளிப்பதற்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் இந்த ஆற்று நீரையே பயன் படுத்துகின்றனர்.

இதன் காரணமாக இப்பகுதி மக்கள் சுகாதார ரீதியாக பாதிக்கபடுவதாக தெரிவிக்கின்றனர்.

நகரத்தில் சேர்க்கபடும் குப்பைகளை பாதை ஓரத்தில் கொட்டபடுவதாலும் அதனை நாய்கள் இழுப்பதால் அப்பகுதி சுகாதார நடவடிக்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது.

அத்தோடு ஆகரா தோட்டப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் இயங்குவதால் மன்றாசி நகரத்தில் கொட்டப்படும் குப்பைகள் அனைத்தும் வந்த இப்பகுதியில் தேங்கி நிற்பதால் அங்கு தொழில் செய்யும் ஊழியர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழைக்காலங்களில் துர்நாற்றம் வீசப்படுவதுடன் நுளம்பு தொல்லையும் அதிகரித்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அனைத்து நகரங்களிலும் வரவேற்பு மற்றும் பெயர் பலகை காணப்பட்டாலும் இன் நகரத்தில் பெயர் பலகை இல்லாவிட்டாலும் சுகாதார நடவடிக்கையை பாதிக்ககூடிய விடயங்கள் காணப்படுவது வேதனை தரகூடிய விடயமாகும்.

எனவே நுவரெலியா பிரதேசசபை அதிகாரிகள் நகரத்தின் சுகாதார நடவடிக்கையை கருத்தில் கொண்டு குப்பைகளை முறையான இடத்தில் கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -