மண்மலையில் ஒரு பொன்மாலை கலை இலக்கிய நிகழ்வும் கலைஞர்கள் கௌரவிப்பும்...!

பொத்துவில் கலை - இலக்கிய பேரவையினால் எதிர்வரும் 2016-07-19 திகதி செவ்வாய் கிழமை மாலை 6.00 மணிமுதல் 'மண்மலையில் ஒரு பொன்மாலை' எனும் மகுடத்தின் கீழ் ஆடித்திங்களிலே (பௌர்ணமி இரவில்) வரலாற்று பெருமைமிக்க மண்மலையில் மாபெரும் கலை இலக்கிய நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் 'வாழ்வினை பாடுவோம்' என்ற தலைப்பில் கவியரங்கு மற்றும் பட்டிமன்றம் இடம்பெறவுள்ளதோடு பொத்தவில் மண்ணுக்கு தேசிய சர்வதேச மட்டத்தில் பெருமை தேடிக்கொடுத்த கலைஞர்கள் கௌவிக்கப்படவுள்ளனர்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் தடம் பதித்து அண்மையில் சிறந்த வெளிநாட்டு பாடலாசிரியருக்கான 'எடிசன்' விருதினை பெற்று இலங்கை மண்ணுக்கு பெருமை தேடிக்கொடுத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் மற்றும் கொழும்பு கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக்கான 'ஏற்றமிகு இளைஞர்' விருதினை பெற்ற பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர், வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் முஷர்ரப் முதுநபீன் ஆகியோர் இந்த நிகழ்வில் கௌரவிக்கப்படவுள்ளனர். 

இந்த நிகழ்வில் பொத்துவில் மண்ணில் கடந்த இரண்டு தசாப்தத்துக்கும் மேலாக கலை- இலக்கிய துறையில் ஈடுபட்டு இயங்கிக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களும் கௌரவம் பெறவுள்ளனர். 

பலவருடங்களுக்கு பிறகு பொத்துவில் மண்ணில் நடக்கும் இந்த மாபெரும் கலை இலக்கிய நிகழ்வில் கலை இலக்கிய ஆர்வலர்கள் கலந்து சிறப்பிக்குமாறு பொத்துவில் கலை இலக்கிய பேரவை அறிவித்துள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -