காணாமல் போன போண்...!

காணாமல் போன போண்....
++++++++++++++++++++

உலகம் 
உடைந்து
ஒரு துண்டு மட்டும்
உள்ளது போல்
உள்ளுக்குள் 
உணர்ச்சி பாயும்.

பக்கத்திலுள்ள
பார்த்தே இல்லா ஆசாமியின்
பக்கட்டினுள் கைவிட்டு
பதட்டத்துடன் போணெடுத்து
பரப்பரப்பாய் டயல் செய்ய
பாவனையில் இல்லையென
பாவி சொல்லுவாள்.

கண்டக்ட் பெயர்கள்
கண்ணுக்குள் வந்து
இன்றைக்கு உனக்கு
இருக்கிடா ஆப்பென்று
மண்டையைக் குடையும்
மனம் லேசாய் உடையும்.

யாருக்கும் தெரியாமல்
இரவு அனுப்பிய
அந்த மேற்றரின்
அனுப்பிய பிரதி
Sent ல் இருக்குமே
செத்தது படமென்று
மெண்டலாய் மாற்ற
மெல்ல முயற்சிக்கும்.

சுற்றி இருப்போர்கள்
சொல்லும் உபதேசம்
பற்றி எரியும் எரிச்சலில்
பெற்றோல் ஊற்றும்.

பேஷ் புக்கை நினைத்து
பிரார்த்தித்தவாறே
பாஸ்வேர்டை மாற்ற
பலமுறை டைப் செய்தும்
யூசர் நேம் சரியான்னு
யோவ் பாருய்யா என
ஓசை எழுப்பும் ஸ்க்ரீனை
உடைக்கத் தோன்றும்

பொலிஸுக்குப் போவமா
பொருத்தமான இடம் சென்று
மை வெளிச்சம் பார்போமா
மறுகாலும் ட்ரவுஸரை
தலைகீழாய் புரட்டி
தடவிப் பார்ப்போமா
அலையாய் ஐடியாக்கள்
ஆயிரம் உருவாகும்.

எத்தனை பயான்களை
இறக்கி வைத்திருந்தேன்
புத்தம் புது பாடலெல்லாம்
போல்டராய்ப் போட்டிருந்தேன்
அத்தனையும் போயிற்றே
ஐயோ என்ன செய்வேன்
குத்தனும் போலிருக்கும்
கொண்டு போன கள்ளனை.

கஸ்டமர் கெயாருக்கு
கட கடன்னு கோல் பண்ண
இஸ்டத்துக்கு ரெகோடிங்
இழுத்திழுத்து பதில் சொல்ல
கஸ்டம் பல பட்டபின்
கடைசியில் ஆபிஸர்
பஸ் போன பின்னாலே
கை காட்ட முடியாதென்று
கஸ்மால பதில் சொல்ல
கடுப்பாகும் மனம் இன்னும்.

போன பரம்பரையின்
புண்ணியவான் எல்லோரும்
போணே இன்றி வாழ்ந்து
போய்ச் சேர்ந்திட்டான்
ஏனோ நாம் மட்டும்
இப்படிக் கஷ்டத்தில்
தானாய் விழுந்தோமென
தனக்குள்ளே யோசிப்பார்.
Mohamed Nizous
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -