மாடறுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிக்குகள் ஆர்பாட்டம்...!

றைச்சிக்காக மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌத்த மத பிக்குகள் சிலரும், பொது மக்களும் சேர்ந்து பண்டாரகம நகரில் பாதையைக் குறுக்கிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த (02) இடம்பெற்ற இவ்வார்ப்பாட்டத்தின் போது, நாட்டில் இறைச்சிக்காக மாடுகள் கொலை செய்யப்படுவதற்கு எதிராக சரியான சட்டமொன்றை நடைமுறைக்குக் கொண்டுவருமாறு ஆர்ப்பாட்டக் காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொதலாவல, மரமநாகல சித்த விவேகாராமயில் இருந்த சுபா எனும் பெயரிலான மாட்டை திருடி, கொலை செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்கம சந்தரத்ன தேரர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது. D C
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -