இலங்கை ஒரு பௌத்த நாடு : சிங்களவர்களுக்கே சொந்தம் – அஸ்கிரிய மகாநாயக்க தேரர்

லங்கை ஒரு பௌத்த நாடு, சிங்களவர்களுக்கே இங்கு பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களுக்கு நினைத்தவாறு செயற்படுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அஸ்கிரிய மகாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற மகாநாயக்க தேரரை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:

நாட்டில் பிரதான இனம் மற்றும் மதம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் ஆட்சியாளர்களை கேட்டால் அப்படி ஒன்றும் இல்லை அவை பொய் பிரச்சாரங்கள் எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

உண்மை ஒருநாள் வெளிவரும், இந்த நாட்டில் மதத்துக்கு எதிராகவும், இனத்துக்கு எதிரான சக்திகள் வெளிக்கிளம்பும் சந்தர்ப்பங்களில் அவைகளை முறியடிக்க பௌத்த மதகுருமார்கள் பின்னிற்கப் போவதில்லை என்பதற்கு இறந்தகாலம் உதாரணமாக திகழ்ந்துள்ளது.

இது ஒரு சிங்கள நாடு, இங்கு சிங்களவர்களுக்கே பிரதான இனம். இது தவிர உலகில் சிங்களவர்களுக்கு என வேறு நாடுகள் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -