கண்டி – கடுகஸ்தொட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற நபரொருவர் அங்கிருந்த கழிப்பறையொன்றில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் அக்குறன பிரதேசத்தில் வசித்து வரும் 64 வயதுடைய ஒரு வியாபாரியென பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மசாஜ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு சென்ற குறித்த நபர் வர வெகு நேரமாகியதாக குறித்த நிலையத்தில் பணி புரிபவரொருவர் தெரிவித்தமையையடுத்தே உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கழிப்பறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.