காத்தான்குடி தள வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக் கூடம் உருவாக்கம்...!

ஹைதர் அலி-
ட்டு மாவட்டத்தின் காத்தான்குடி தள வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக தேவைப்பாடாகக் காணப்பட்டு வந்த சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை நியமிப்பதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் பல முயற்சிகளை மேற்கொண்டு நியமிக்கப்பட்டு 2016.07.20ஆந்திகதி (இன்று) முதல் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக சத்திர சிகிச்சை கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலை பலவகையிலும் தரமுயர்த்தி பொதுமக்கள் எதுவித தடையுமின்றி இலகுவான முறையில் தங்களது சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற என்னத்துடன் இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தியில் மிகவும் கரிசனையும், ஆர்வமும் காட்டிவரும் பொறியியலாளர் சிப்லி பாறுக் அண்மையில் மிக சத்திரசிகிச்சை பிரிவிற்கு அவசியமான இரத்த வங்கி உருவாக்கும் விடயத்திலும் பாரிய பங்களிப்பினை செய்திருந்தார். 

மத்திய அரசாங்கத்தினூடாகவும், மாகாண சபையினூடாகவும் பலதரப்பட்ட பௌதீக வளங்களை பெற்றுக்கொடுப்பதோடும் பொதுமக்களின் நன்மை கருதி இவ்வாறான பலதரப்பட்ட பிரிவுகளை ஆரம்பித்து வருவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கையாக மகப்பேற்று நிபுணர் ஒருவரை நியமிக்கும் பணியில் மிகத்தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் தெரிவித்தார்.

இன்று புதிதாக நியமிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சத்திர கிசிக்சை நிபுணர் நியமனம் மற்றும் சத்திர சிகிச்சை கூடம் என்பன பொதுமக்களின் நன்மை கருதி இவ்வைத்தியசாலையில் உருவாக்கப்பட்டமைக்கு பொதுமக்கள் அனைவரும் மாகாண சபை உறுப்பினருக்கு தங்களது நன்றிகளையும். வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஏழை மாணவர்களின் கல்வியிலும், பொதுமக்களின் சுகாதார முன்னேற்றத்திலும் மிகவும் அக்கரையும், கரிசனையும் காட்டிவரும் பொறியியலாளர் சிப்லி பாறுக் எம்மாவட்டத்தின் சொத்தாகவே நாம் கருத வேண்டியுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -