அட்டாளைச்சேனை வடிகான் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்





அபு அலா, சப்னி அஹமட் - 

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட பிரதேசங்களில் இனி வரும் காலங்களில் வடிகாலமைப்பு சீர் செய்யப்பட்டு அதற்கான தீர்வுகள் முன்னெடுக்கப்படும் என்று கிழக்கு மாகாண சுகாதாரம், சுதேச மருத்துவம், நன்னடைத்தை மற்றும் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குற்பட்ட பிரதேசங்களில் காணப்படும் வடிகால் அமைப்பது தொடர்பாகவும் அதற்கான தீர்வினை பெறும் கலந்துரையாடலும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் நேற்று (28) மாலை பிரதேச செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றபோது மேற்கண்டவாறு கூறினார்

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் மிக அதிகமாக மழை வெள்ளத்தினால் பதிப்படைந்து வரும் பிரதேசமாக அட்டாளைச்சேனை காணப்படுகின்றது. இதனை நிபர்த்தி செய்வது தொடர்பான விஸேட செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைத்திட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கும் முகமாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் ஒவ்வொரு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் கண்கானிப்பின் கீழ் இயங்கி செயற்பட்டால் தான் இந்த வேலைத்திட்ங்களை மிக விரைவாகவும், சீராகவும் செய்து முடிக்கலாம்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இது தொடர்பான பொது மக்கள் சந்திப்பும், உயர் அதிகாரிகரிகளுடனான மிக விரிவான கலந்துரையாடலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்காக வேண்டியும் நகரத்தை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டியும் அமைச்சர் ஹக்கீமினால் பெறுமளவிலான நிதி ஒதிக்கீடும் செய்யப்பட இருக்கின்றது என்றார். 

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, வீதி அபிவிருத்தி திணைக்கள மாகாணப் பணிப்பாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் பிரதேச செயலக தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -