அரச காணிகளில் உள்ள குடியிருப்புக்களை அகற்றும் பணி தீவிரம்....!

ஜுனைட்.எம்.பஹ்த்-
காத்தான்குடி பிரதேச சபைக்குற்பட்ட புதிய காத்தான்குடி 166A கிராம சேவை பிரிவில் அரச ஒதுக்கு காணிகளில் குடியேரிய மக்களை அகற்றும் பணிகளை காத்தான்குடி பிரதேச சபை 15.07.2016 இன்று தீவிரப்படுத்தியுள்ளது.

இப் பகுதியில் உள்ள தோனா எனப்படும் அரச ஒதுக்கு காணிகளில் பல வருட காலமாக வாழ்ந்துவரும் பொதுமக்களை திடீரன அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு காத்தான்குடி பிரதேச சபை அழுத்தம் பிரயோகித்திருப்பதால் அப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அப் பகுதியில் பாதிக்கப்பட்ட இரு குழந்தைகளின் தந்தையான அஷ்ரப் என்பவர் கருத்து தெறிவிக்கும் போது....

நான் பல வருடங்களாக இந்த அரசகாணியில் எனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறேன்.. எனது குடும்பம் 2004 ம் வருடம் ஏற்பட்ட சுனாமி அனர்தத்தில் பாரிய பாதிப்பை முகம் கொடுத்தது குடும்பத்தில் சில உயிர்களையும் இழக்க நேர்ந்தது.. வீடு, சொத்து, பொருளாதாரம் ,உறவுகள் என அத்தனையும் இழந்து நானும் எனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் பல வருடங்கள் அகதி முகாம்களில் வாழ்ந்துள்ளோம். 

இவ்வாறான துன்பங்களை அனுபவித்த நாங்கள் இந்த சிரிய இடத்தை நிம்மதியாக வாழ தேர்வு செய்தோம் ஆனால் அதுவும் சிலருக்கு பொறுக்கவில்லை.

நான் அரசகாணியில் சட்ட விரோதமாக குடியிருப்பதாக கூறி என்னை அப்புறப்படுத்த முயல்கிறார்கள் . நான் கேட்கிறேன் இப் பிரதேசத்தில் நான் மட்டுமா அரச காணியில் குடியேறியுள்ளேன் ? இந்த காத்தான்குடி பிரதேசத்தில் அதிகமான மக்கள் அரச ஒதுக்கு காணியான தோனா பகுதியில்தான் பல கட்டிடங்களை கட்டி வாழ்கிறார்கள்.. ஏன் இவர்களுக்கு சட்டம் அனுமதி கொடுக்கிறதா?

எனது வேண்டுகோள். எனக்கு எனது குடும்பத்துடன் குடியேர ஒரு மாற்று காணிகளை அரசாங்கம் பெற்றுத்தரட்டும் நான் இந்த இடத்தை விட்டு வெளியேறுகிறேன் என கவலையுடன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அதே போல இன்னுமொரு பெண்மணி கருத்து தெரிவிக்கும் போது நான் பல வருடங்கள் இந்த இடத்தில் வாழ்கிறேன்.1972 ம் ஆண்டு காலப்பகுதியில் இந்த வீட்டில் இந்த மன்னில் நான் பிறந்தேன் அன்றல்லாம் இல்லாத பிரச்சனைகள் இன்று இத்துணை வருடம் வாழ்ந்த எங்கள் வீடுகளை விட்டு நாங்கள் எங்கே போவது..?

இவ்வாறான மக்களின் ஆதங்கத்திற்கு அரசாங்கம் பதில் கூறுமா? காத்தான்குடி பிரதேச செயலாளர் அவர்களே! பாராளுமன்ற உறுப்பினர்களே! மாகாண சபை உறுப்பினர்களே! இது உங்களின் கவனத்திற்கு!

உங்களுக்கு வாக்களித்து தங்களின் பிரதிநிதியாக உங்களை தேர்ந்தெடுத்த மக்களின் இவ் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்று கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -