”இடைநிறுத்தப்பட்ட இல்யாஸ், கலீலை இணைக்க ஹக்கீம் முடிவு”

ஜம்சத் இக்பால்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸை மீண்டும் அதற்கு உள்வாங்குவதற்கு தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ காதிர் தெரிவித்தார். 

கூட்டுப் பொறுப்பை மீறி நடந்த காரணத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸின் வேண்டுகோளின் பேரிலும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் இத்தீர்மானத்தை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார். 

அத்துடன், உலமா காங்கிரஸின் பிரதிநிதி என்ற பதவியை இடைநிறுத்தம் செய்வதாக எடுக்கப்பட்டிருந்த தீர்மானம் நிபந்தனையொன்றின் கீழ் விலக்கிக் கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஆகையால், மௌலவி எச்.எம்.எம்.இல்யாஸ் உலமா காங்கிரஸ் பிரதிநிதியாக இனிவரும் உச்சபீட கூட்டங்களில் கலந்துகொள்ளவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் குறிப்பிட்டார்.

---
மௌலவி ஏ.எல்.எம்.கலீலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சபீடத்தில் மீண்டும் இணைத்து கொள்வதற்கு கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் உச்சபீடத்திற்கு பரிந்துரை செய்துள்ளதாக கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ காதிர் அறிவித்துள்ளார்.

மௌலவி ஏ.எல்.எம்.கலீலை உச்சபீடத்தின் தொடர்ச்சியான மூன்று கூட்டங்களுக்கு சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால், மஜ்லிஸ் ஏ சூறா என்ற அமைப்பின் தலைமை பதவியின் மூலம் அவர் உச்சபீடத்திற்கு உறுப்புரிமையை பெற்றிருந்தமை விலக்கிக் கொள்ளப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

எனினும், மௌலவி ஏ.எல்.எம்.கலீல் அதனை மீள்பரிசீலனை செய்யுமாறு விண்ணப்பித்திருந்ததற்கு அமைவாகவும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசின் அடிப்படையிலும் மேற்படி தீர்மானத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டுள்ளதாகவும், அதன்படி, எதிர்வரும் உச்சபீடத்தின்; தீர்மானம் மௌலவி ஏ.எல்.எம்.கலீலுக்கு அறிவிக்கப்படும் எனவும் செயலாளர் மன்சூர் ஏ காதிர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -