அமைச்சா் றிசாத் மற்றும் கல்வியமைச்சா் இணைந்து அரும் பொருட்காட்சி கலையை பாடசாலை மட்டத்தில் ஆரம்பிப்பு.!

அஷ்ரப் ஏ சமத்-
கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் கீழ் உள்ள தேசிய அருங்களைகள் பேரவை யினால் நாட்டில் உள்ள பாடசாலைகளில் கற்கும் மாணவா்களை தேசிய ரீதியில் கைப்பணிப் போட்டி மற்றும் கண்காட்சிகளை நடாத்துவதற்கான திட்டம் இன்று (14)ஆம் திகதி கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சா் றிசாத் பதியுத்தீன், கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோறினால் கைத்தொழில் அமைச்சில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய அமைச்சா் றிசாத் பதியுத்தீன் -

பாடசாலைகள் மட்டத்தில் மாணவா்களுக்கிடையே எமது நாட்டின் அருங்கலைகளை ஊக்குவிக்க வேண்டும். அதற்கமைவாக கல்வியமைச்சும் கைத்தொழில் அமைச்சின் இணைந்து இத்திட்டத்தினை வருடாந்தம் செயல்படுத்துகின்றது. இதன் மூலம் மாணவா்கள் அரும் கலைகளை ஊக்குவித்து அவற்றுக்கு கண்காட்சி, பரிசிதல்கள், அவா்களுடைய உற்பத்திகளை சந்தை வாய்ப்பு ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தாா்.

அவா் மேலும் அங்கு உரையாற்றுகையில் - 

இன்று காலை அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை வற் வரி சம்பந்தமாக கூடிய உப அமைச்சரவை கூடி உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்துள்ளோம். கடந்த காலங்களில் உணவு பண்டங்களின் வற் வரி சம்பந்தமாக ஊடகங்களிலும் எதிா்கட்சியினா்களிடையேயும் பொதுமக்களிடையே பாரிய பிரச்சாரம் ்இருந்து வருகின்றது. 

அதற்கமைவாக 16 பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனி ஒரு கிலோ 95 ருபா, பருப்பு 169 ருபா, இறக்குமதி செய்யப்பட்ட பால்மா 810 ருபா உள்நாட்டு பால்மா 735 ருபா, உருளைக்கிழங்கு 120 வீ வெங்காயம் 77 கோழி இறைச்சி 385 ருபா போன்ற 16 பொருட்கள் விளை குறைக்கப்பட்டுள்ளது. என தெரிவித்தாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -