ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு பொறியியலாளர் சிப்லி பாறுக் விஜயம்...!

M.T. ஹைதர் அலி-
விசேட தேவையுடையவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனாதரவற்றவர்களின் விடயங்களில் மிகவும் கரிசனையும், அக்கரையும் காட்டிவரும் மாகாண சபை உறுப்பினர் இவர்களும் சமூகத்தில் மதிக்கத்தக்க அந்தஸ்துடையவர்களாக வாழ வேண்டுமென்ற நோக்கத்துடன் பல வழிமுறைகளையும், வேலைத்திட்டங்களையும் அவர்களுக்காக மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் பிரதேசத்தில் அமைந்துள்ள பெற்றோரை இழந்த சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் 2016.07.19ஆந்திகதி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.

அங்குள்ள பௌதீக வளப்பற்றாக்குறை மற்றும் ஏனைய குறைபாடுகளையும் கேட்டறிந்து நேரில் பார்வையிட்ட பொறியியலாளர் சிப்லி பாறுக் தனது சொந்த நிதியிலிருந்து வருடத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருநாள் முழுநேர உணவுக்கான செலவீனத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்தார்.

அன்றைய தினம் தனது சொந்த நிதியில் பகலுணவை பெற்றுக்கொடுத்த பொறியியலாளர் சிப்லி பாறுக் அப்பிள்ளைகளுடன் அன்றைய தினம் தனது பகற்போசன விருந்தை உண்டு மகிழ்ந்ததோடு, அன்றைய பொழுதையும் அவர்களுடன் கழித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்...

இவ்வாறான இல்லங்களுக்கு சமூகத்திலுள்ள தலைவர்கள், படித்தவர்கள், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் விஜயம் செய்வதன் மூலம் இவ்வாறான அனாதை சிறார்களின் தன்நம்பிம்பிக்கை வளர்வதைவதுடன் சமுக நீரோட்டத்தில் நமக்கும் சம்பங்குண்டு என்கின்ற எண்ணப்பாடு அவர்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு சேர்க்கும் மேலும் இவ்வாறான மிகப்பாதுகாப்பான பெண் அனாதை சிறுமிகளை பராமரிப்பதற்கான இல்லங்கள் உருவாக்கப்படவேண்டிய இக்கட்டான சூழலும் தற்போது உருவாகியுள்ளது. இதுசம்பந்தமாகவும் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

இந்நிகழ்வில் சிறுவர் இல்லத்தின் நிருவாக சபை உறுப்பினர்களும் பகற்போசன விருந்தில் கலந்துகொண்டதோடு, தங்களது மனமார்ந்த நன்றிகளையும் மாகாண சபை உறுப்பினருக்கு தெரிவித்துக்கொண்டனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -