பெண் வைத்தியருக்கு இடையூறு விளைவித்த மூவருக்கு விளக்கமறியல்..!

அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிய பெண் வைத்தியருக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஸ்வானந்த பெர்ணான்டோ இன்று (02) உத்தரவிட்டார்.

கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் பெண் வைத்தியர் கடமையை முடித்து விட்டு 30ம் திகதி வைத்தியசாலை விடுதிக்கு சென்று கொண்டிருந்த வேளை வீதியில் நின்ற இளைஞர்களால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

அம்முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் மூன்று பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களை ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவிணை நீதவான் பிறப்பித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -