அவுஸ்திரேலியா வர்த்தக பிரதிநிதிகளுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையே சந்திப்பு....!

ஹாசிப் யாஸீன்-
வுஸ்திரேலியா நாட்டு வர்த்தக பிரதிநிதிகளுக்கும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸூக்குமிடையேயான சந்திப்பு இன்று (12) செவ்வாய்க்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,

நாட்டில் நிலவும் சமாதான சூழலை அடுத்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்வதற்கு சாதகமான ஏற்பாடுகளை எமது நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனவும் இதனை பயன்படுத்தி அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களையும் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளவைக்குமாறு வர்த்தக பிரதிநிதிகளிடன் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மேலும் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு தனியார் துறையினரின் பங்களிப்பினைஎதிர்பார்ப்பதாகவும் அதனடிப்படையில் இலங்கையின் விளையாட்டுத்துறை அபிவிருத்திற்கு உதவுமாறும் அவுஸ்திரேலியா வர்த்தக பிரதிநிதிகளிடம் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் கோரிக்கை விடுத்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட அவுஸ்திரேலியா வர்த்தக பிரதிநிதிகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகபிரதி அமைச்சரிடம் உறுதியளித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -