கிழக்கு மாகாண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கந்தளாயில் - படங்கள்

ஏ.எஸ்.எம்.தாணீஸ்-
கிழக்கு மாகாணத்தின் பாடசாலை மாணவர்களுக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் கந்தளாய் லீலாரட்ண விளையாட்டு மைதானத்தில் (27) அன்று ஆரம்பமானது.

ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ட்ரின் பெர்ணான்டொ, கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களான வைத்தியர் அருன சிரிசேன, ஜயந்த விஜேசேகர, கல்விச் செயலாளர் அசங்க அபயவர்தண, மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிஸாம், உடற் கல்விக்கான மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர் ஈ.ஜி.பி.ஐ.தர்மதிலக, வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் 17 கல்வி வலயங்களின் பாடசாலைகள் கலந்துகொள்ளும் இப்போட்டி நிகழ்ச்சிகள் 27 முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் அதிதிகள் வரவேற்கப்படுவதையும், மாகாணக் கல்விப் பணிப்பாளர் நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும், ஆரம்ப நிகழ்வின் கலாச்சார நிகழ்வுகளையும் படத்தில் காணலாம்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -