அதிகாரத்தை அடைய எடுக்கின்ற எந்த முயற்சியும் எழுச்சியாகாது - அஸ்மி ஏ கபூர்

நிறைய வேலைத்திட்டங்கள் முஸ்லீம் சமுகத்தின் நிலைப்பாடுகளை பற்றி முன்னெடுக்கப்படுகின்ற வேளையில் அதிகார பரவலாக்கல் விடயத்தில்..

  • இணைந்த வடகிழக்கில் முஸ்லீம்களுகான முதலமைச்சர் சம்பந்தன் ஐயா கூறுவதை போல்.
  • வடக்கு கிழக்கு வேறு வேறு பிராந்தியங்களாக இருத்தல். 
  • இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்களுக்கான நிலத்தொடர்பற்ற ஆளுகை நிலப்பரப்பு.

இவ்வாறான விடயங்கள் பேசுகிற நேரத்தில் சென்ற உள்ளூராட்சி தேர்தலுக்கு முன் நடந்த தேர்தல் தொடர்பாகவும் அதில் முன் வைக்கப்பட்ட இவை தொடர்பான கதையாடல்களையும் சொல்லலாம் என நினைக்கிறேன்.

தேசிய காங்கிரஸ் என்கின்ற கட்சி ஆரம்பிக்கப்பட்டு முதலாவது உள்ளூராட்சி தேர்தல் விடுதலை புலிகளின் மிக வன்முறையான நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அதாஉல்லாஹ் என்கின்ற தனிமனிதன் வடக்கு கிழக்கு பிரிக்க வேண்டுமென்று கிழக்கு முஸ்லீம்களின் பெரும்பான்மை நிலப்பரப்பாக வேண்டுமெனவும் தொலைக்காட்சியிலும் அரசியல் மேடைகளும் விளிப்புணர்வு ஏற்படுத்தி திரிகின்ற அந்தக்காலப்பகுதியில்

முஸ்லீம் தேசியவாதிகள் இயக்கம் என்கின்ற ஒரு அமைப்புடன் வேதாந்தி வந்து மேடைகளில் முழங்கினார். வடக்கு கிழக்கு பிரிக்க தேவையில்லை இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் பெரும்பாண்மை நிலப்பரப்பை ஒன்றித்தாக முஸ்லீம் சுயாட்சி என்என்றார், வடக்கு கிழக்கு பிரிந்தால் இரத்த ஆறு ஓடும் என்று பேசினார்.

ஆனால் அதாஉல்லாஹ் வெகுவாக கிழக்கு பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார் அதனால் ஏற்பட போகும் அனுகூலங்களை எடுத்துரைத்தார்.

இன்று யாரே வழக்கு போட்டு பிரித்தாக ஓரே வார்த்தையில் வேதாந்தி ஒரு மேடையில் கூறி முடித்ததை பார்த்து வியக்க வேண்டி கிடக்கிறது ஓரே வேளையில் ஒரு அரசியல் களத்தில் விடுதலை புலிகள் இருக்க தக்கதாக பேசப்பட்ட விடயங்களை கூட வேதாந்தி சேகு இஸ்ஸதீனால் கூறி முடிக்காமல் போனமை கிழக்கு பிரிக்க அதாஉல்லாஹ் தனது பிடரி நரம்புகளுக்கு அருகில் மரணத்தை அழைத்து கொண்டு திரிந்ததை யாரும் கொச்சப்படுத்த இடமளிக்க இயலாது.

அன்று ஒரு உள்ளூராட்சிமன்றம் தேர்தலுக்காக இவரால் உருவாக்கப்பட்ட தேசிய வாத இயக்கம் தொடர்பில் அள்ளுண்டு அலைந்தவர்களில் நானும் ஒருவன் பின்னர் அது காணமல் போனது சமுகத்துக்காக கருத்துக்களை முன் மொழிவது தொடராகவும் அரசியல் எதிர்பார்பற்றதாகவும் இருக்க வேண்டும்.

வெறுமனே பதவிகளை அலங்கரிப்பதற்கான வேலைத்திட்டமாக அது இருக்குமானால் எழுச்சிகளல்லாம் சூழ்ச்சிகளாகத்தான் நோக்க வேண்டி வரும் ரவூப் ஹக்கீமின் தலைமை பதவியோ காங்கிரஸோ ஒரு விடயமல்ல
கிழக்கு முஸ்லீம்களின் பெரும்பான்மையானவர்கள் அதை புரிந்து கொண்டு விட்டார்கள் இவ்வளவு காலமும் காங்கிரஸின் நிழலில் ஹக்கீமை புகழ்பாடியவர்கள் இன்று மறைந்திருந்து எழுச்சி என்பது சூழ்ச்சியே ஆகும். அதனால் சமுகத்துக்கு எந்த பயனுமில்லை மு.கா என்கின்ற பதவி மோக கொள்ளையர்களிடம் இருந்து முஸ்லீம் சமுகத்தை மீட்டு தேசிய காங்கிரஸின் தலைமையின் தீர்க்கதரிசன செயற்பாடுகளின் பின்னால் அணி திரள்வோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -