எச்.ஏ.அஸீஸ் எழுதிய ஐந்து கண்டங்களின் மண் கவிதை நூல் வெளியீட்டு விழா...!

அஸ்ஹர் இப்றாஹிம், எம்.வை.அமீர்-
ல்முனை எச்.ஏ.அஸீஸ் எழுதிய ஐந்து கண்டங்களின் மண் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ” பாவலர் பஸீல் காரியப்பர் அரங்கில் இடம்பெற்றது.

கலாபுசணம் ஏ.பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் தீன் முஹமமத் கலந்து கொண்டதுடன் கலாநிதி யு.பாறூக் ( உபா ) விசேட உரையினையும், தீரன் ஆர்.எம் நௌஸாத் கவி நயத்தலையும், பேராசிரியர் சி.மௌன குரு நூலின் முதற் பிரதியினை நூலாசிரியர் எச்.ஏ.அஸீஸின் தாயார் பல்கீஸ் உம்மாவிற்கு வழங்கி வைத்து நூல் பற்றிய கருத்துரையினையும், பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ் நூல் ஆய்வினையும், வைத்திய கலாநிதி புஸ்பலதா லோகநாதன் கருத்துரையினையும் பேராசிரியர் தீன் முஹம்மத் சிறப்புரையினையும் நூலாசிரியர் எச்.ஏ.அஸீஸ் ஏற்புரையினையும் வழங்கினார்கள்.

இக் கவிதை நூல் வெளியிட்டு விழாவில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பன்னூலாசிரியர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்ட வல்லுனர்கள், கல்வியலாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், வர்த்தக பிரமுகர்கள், நூலாசிரியரின் குடும்பத்தினர், பாடசாலை நண்பர்கள், பெண்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இக் கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எஸ்.ஹமீத் வெளியீ்ட்டகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -