அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் இன்று (02) பிற்பகல் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னியாவிலிருந்து மோட்டார் சைக்கிளில் திருகோணமலை நோக்கி வேகமாகச் சென்ற மோட்டார் சைக்கிள் வளைவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி மின் கம்பத்துடன் மோதியதில் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் திருகோணமலை- அன்புவெளி புரம் பகுதியைச்சேர்ந்த சீ.தானியன் (17 வயது) மற்றும் கே.விதுஷன் (18 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை 03ம் கட்டை பகுதியில் முற்சக்கர வண்டியும் -மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கற்பிணித்தாயொருவர் காயமடைந்துள்ளார்.
இவர் நிலாவெளி- பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த யூ.பிரேமலதா (32 வயது) எனவும் முற்சக்கர வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு விபத்துக்கள் தொடர்பாக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.