புல்மோட்டை மத்திய கல்லூரியின் தொழினுட்ப ஆய்வு கூட திறப்பு விழா..!

த்திய அரசினூடாக புல்மோட்டை மத்திய கால்லூரியின் தொழினுட்ப ஆய்வுகூடம் கிழக்கு மாகாண கல்வி மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் கெளரவ தண்டாயுதபாணி மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் ,குச்சவெளி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஏ.பி.தௌபீக் ,முன்னாள் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்களான எச்.எம்.சல்மான் பாரீஸ், எம்.ஐ.பதுருதீன் திருகோணமலை வலைய கல்விப்பணிப்பாளர் திரு.விஜேந்திரன் ,குச்சவெளி கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு. செல்வநாயகம் ஏனைய பாடசாலை அதிபர்கள் புத்திஜீவிகள் அரச உத்தியோகத்தர்கள் புல்மோட்டை வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் சுதாகர் உட்பட பலரும் கலந்து கொண்டு 29.07.2016 ம் திகதி காலை10.30 மணியளவில் வைபவரீதியாக திறந்து வைத்தனர்.

தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் உரையாற்றுகையில்..

குறித்த திருகோணமலை மாவட்ட பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளங்கள் தொடர்பாக மாகாண சபையில் அடிக்கடி பிரேரணை முன்வைத்து பேசி கல்வி அமைச்சர் மற்றும் வலைய கல்வி அதிகாரிகளோடு முரண்படுவது எந்த தனிநபர் முரண்பாடுகள் கிடையாது பிரதேச பாடசாலைகளின் தேவைகளை நிறைவேற்றும்படி கோரியதை அமைச்சர் ஒருபோதும் முரண்பாடாக கருதமாட்டார் அத்துடன் எதிர்வரும் ஒருசில மாதங்களுக்குள் பட்டதாரி ஆசிரியர்கள் போட்டிப்பரீட்சையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கணிதம் விஞ்ஞனம் ஆங்கிலம் போன்ற பாடங்களுக்காக சுமார் 1134 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளீர்க்கபட்டு நியமிக்கப்பட உள்ளார்கள் குறித்த நியமனத்தின் போது குச்சவெளி கோட்டம் அவ்வாறே மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளுக்கும் நியமிக்க படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவித்ததுடன் பௌதீக வளங்களையும் நிவர்த்தி செய்யகோரி அமைச்சரிடம் முன்வைத்தார்.

மேலும் எமது பிரதேசத்தில் குறைந்த வளங்களை கொண்டு க.பொ.சா மற்றும் உயர்தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சை போன்றவற்றில் நல்ல பெறுபேறுகளை மாவட்ட ரீதியில் பெற்றுள்ளார்கள் தொடர்ந்து ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதனூடாக மாகாண மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைக்கக்கூடிய மாணவர்கள் எமது மாணவர்கள் அதனால் எமது மாவட்டத்தையும் மாகாணத்தையும் கல்வியில் உயர்த்த எதுவாக இருக்கும் என தெரிவித்தார்.

பாராளுமன்ற மன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பேசுகையில்,

மாவட்டத்தின் கல்வி வளர்க்கப்படவேண்டும் ஆசிரயர் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட வேண்டும் மேலும் ஆசிரயர் இடமாற்றம் முறையாக இடம்பெறவேண்டும். வட்டார எல்லை பிரிப்பு குறித்து தாம் அவதானமாக இருப்பதாகவும் உரிமைகள் குறித்து மாவட்ட குழு கூட்டத்தில் கல்வி அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் பூரண ஒத்துழைப்பை தருவதை தான் நினைவு படுத்தினார்.

தொடர்ந்து கல்வி அமைச்சர் பேசுகையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவர்கள் பிரதேச மற்றும் மாவட்ட கல்வி தொடர்பாக மாகாண சபையில் பிரேரணைகளை பல முறை முன்வைத்து பேசினார் என்னோடும் பல முறை முரண்பட்டது குறித்த நான் பிழையாக கருதவில்லை அது நியாயமான கோரிக்கை என்பதை நான்அறிவேன் அத்துடன் அதிபர் ஆசிரியர்கள் தியாகத்துடன் செயல்படவேண்டும் மாணவர்களை தூண்டிவிட்டு வீதிகளில் போராட்டங்களை ஏற்படுத்துவது முறையற்றது அவைகள் பக்குவமாக கையாளவேண்டும்.

மாகாண சபை உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்களின் வேண்டுகோள்களை நான் சரியானது என புரிந்து கொண்டேன் குறித்த ஆசிரியர்கள் பற்றாகுறை இன்னும் ஓர் இரு மாதங்களுக்குள் அன்வர் அவர்கள் குறிப்பிட்டது போன்று பாட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கல்வியல் கலூரியிரில் இருந்து வெளியாகும் ஆசிரியர்களோடு சேர்த்து நியமிக்கபாடுவர் என வாக்குறுதி அளித்தார்.​







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -