அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட சொகுசு பஸ் விபத்து - ஒருவர் பலி

க்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட சொகுசு பஸ் ‪ஓட்டமாவடியில்‬ வைத்து சிறிய ரக கோழி லொரியுடன் விபத்துக்குள்ளானது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பகுதியில் 20.07.2016 புதன்கிழமை இரவு கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அக்கரைப்பற்றுப் பிரதேசத்திலிருந்து  கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த சொகுசு பஸ்ஸும் வெலிக்கந்தைப் பிரதேசத்திலிருந்து திருகோணமலைக்கு கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த சிறிய ரக லொறியும் நேருக்குநேர் மோதியதனாலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் லொறியின் சாரதி பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயரிழந்துள்ளார். 

இதேவேளை, சொகுசு பஸ்ஸை செலுத்திச் சென்ற அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சாரதி (வயது-33) படுகாயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையிலும் கோழி லொறியில் உதவியாளரான திருகோணமலையைச் சேர்ந்தவர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -