சமூக மாற்றம் எவ்வளவு கடினமானது என்பதை குறிப்பிட்ட காலத்துக்குள் உணர்கிறேன் - பேராசிரியர் நாஜீம்

எம்.வை.அமீர் -
மூக மாற்றத்தை கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம் என்பதை தான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவியேற்று ஒருவருடமும் ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில் உணர்வதாக தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

கலாநிதி அபூபக்கர் றமீஸ் எழுதிய “சமூகவியல் சமூகமானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூல் வெளியிடும் நிகழ்வு சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸ்ஸாக் தலைமையில் 23-07-2016 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே உபவேந்தர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நூலாசிரியர் கலாநிதி அபூபக்கர் றமீஸ், தனது தாயார் யூ.கே.வதவியத்தும்மாவுக்கு 
பேராசிரியர் எம்.ஏ.நுஃமானூடாக தனது நூலின் விசேட பிரதி ஒன்றினை வழங்கிவைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர் நாஜீம்,

சமூகத்தில் மாற்றம் ஒன்றைக்கொண்டுவருவது எவ்வளவு கடினமாது என்பதை தான் தனது அனுபவத்தில் உணர்வதாகவும் அவ்வாறானதொரு மாற்றத்தைக் கொண்டுவர முயற்சிக்கும் போது தான் எதிர்நோக்கும் சவால்களை அநேகர் உணர்வர் என்றும் தெரிவித்தார்.

சமூக மாற்றம் தெடர்பான விடயங்களை தொகுத்து புத்தகவடிவில் கொண்டுவருவது என்பதும் மிகக் கடினமான விடயம் என்றும் தெரிவித்தார். கலாநிதி அபூபக்கர் றமீஸ் எடுத்துள்ள இந்த முயற்சி சிறந்த முயற்சி சவால்கள் நிறைந்ததும்கூட இவ்வாறான முயற்சிகள் நமது சமூகத்தில் இன்னும் மேற்கொள்ளப்பட வேண்டும். அத்துடம் தமிழில் வெளியாகும் இவ்வாறான வெளியீடுகள் மிக அரிதானவை இன்னும் நிறைய வெளியீடுகளை கலாநிதி றமீஷைப்போன்றவர்கள் வெளியிட வேண்டும் அதனுடாக சமூக மாற்றங்கள் நிகழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வுக்கு சிறப்பு அதிதியாக பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் நூல் அறிமுகத்தை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ்வும் ஏற்புரையை நூலாசிரியரும் வழங்கினர். கல்வியாளர்கள் துறைசார்ந்தோர் மாணவர்கள் கலாநிதி அபூபக்கர் றமீஸுடைய குடும்ப உறவினர்கள் என அதிகமானோர் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -