லசந்த கொலை: இராணுவ வீரரை அடையாளம் காட்டினார் சாரதி

2009ம் ஆண்டு ஜனவரி 8ம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் சார்ஜன்ட் மேஜர் தொடர்பான அடையாள அணி வகுப்பு நேற்று கல்கிசை மேலதிக நீதவான் லோசனா வீரசிங்க முன்னலையில் நடைபெற்றது.

இதன்படி, கொலைச் சம்பவத்துக்குப் பின்னர் தன்னை மிரட்டியதாக கூறப்படும் சார்ஜன்ட் மேஜரை, லசந்த விக்ரமதுங்கவின் சாரதியால் அடையாளம் காட்ட முடிந்ததாக, லசந்த சார்பில் ஆஜரான சட்டத்தரணி அதுல எஸ்.ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொலை நடத்தன்று அதனை நேரில் பார்த்தவர்களை எதிர்வரும் 3ம் திகதி சாட்சியமளிக்க அழைக்குமாறு, கல்கிசை நீதவான் மொஹமட் சகாப்தின் நேற்று உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சந்தேகநபர் ஊடகவியலாளர் உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -