சவுதியில்: தாயை கொலை செய்த இரட்டை சகோதரர்கள் - அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்கள்

வுதி அரேபியாவில் , பெற்ற தாயை குத்தியும், கழுத்தை வெட்டியும் படுகொலை செய்த இரட்டை சகோதரர்களிடம் தொடர்ந்தும் தீவிர விசாரணைகளை நட த்தி வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் ரியாத்தின், அல்-ஹர்மா மாவட்ட த்தில் இடம்பெற்றிருந்தது.

கடந்த மாதம் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது 67 வயதான ஹைலா அல்-ஆர்னி என்ற பெண் தனது மகன்களால் கழுத்து வெட்டியும், பல முறை குத்தியும் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

சாலே மற்றும் காலிட் என்ற இரட்டைச் சகோதரர்கள் இக்குற்றத்தை புரிந்திருந்தனர்.

தாயை களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று இக்குற்றத்தை புரிந்த அவர்கள் தமது 73 வயதான தந்தையையும் விட்டு வைக்கவில்லை. அவரை மட்டுமன்றி 22 வயது சகோதரனையும் பல முறை ஈவிரக்கமின்றி குத்தியுள்ளனர்.

ஐ.எஸ் ஆதரவு கடும்போக்கு வாத சிந்தனைகளை ஏற்றுக்கொண்டமையே இப்படுபாதக செயலுக்கான காரணமென சவுதி அரேபியாவின் உள்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் கடந்த 3 ஆண்டுகாலமாக அவர்கள் இவ்வாறான சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தின் போது வீட்டில் இருந்த 29 வயதான இரட்டையர்களின் சகோதரி, அறையை விட்டு வெளியே வராமையால் தப்பித்துள்ளார்.

மேற்படி சகோதர ர்கள் ஐ.எஸ் உடன் இணைவதற்கு தாயார் மறுப்பு தெரிவித்தமையே கொலைக்கான காரணமென ஆரம்பத்தில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -