சிங்கள இனவாத சிந்தனை அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளமை குறித்த அரசு கவனத்திற்கொள்ள வேண்டும்



நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான தவறான பிரசாரங்களை முன்னெடுத்து, கலவரங்களையும் இன சங்காரத்தையும் மேற்கொள்ள பொதுபல சேன உட்பலான சிங்கள இனவாத சிந்தனை கொண்ட அமைப்புகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி இவ்வாறானவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும். 

இதன்மூலமே இன்றைய நல்லாட்சி அரசாங்கம் மீது முஸ்லிம் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் கட்டியெழுப்ப முடியுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

அண்மைக் காலமாக நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம் சிங்கள மக்களின் உணர்வுகளை முஸ்லிம் மக்களுக்கு எதிராகத் தூண்டி விட்டு மீண்டும் ஒரு பாரிய அழிவுக்கு இட்டுச் செல்லும் முயற்சியில் பொதுபல சேன, சிங்கள ராவய உட்படலான முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனை கொண்ட சிங்கள சக்திகள் முயற்சித்து வருகினறன.

இதற்கு உதாரணமாக, அண்மையில் இடம்பெற்ற மஹியங்கனை சம்பவம் மற்றும் தெஹிவளை பாத்தியா வீதி பள்ளிவாசல் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம் போன்றனவற்றைக் குறிப்பிடலாம். முஸ்லிம் மக்கள் புனித ரமழான் மாதத்தில் நோன்பை அனுஷ்டித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களைச் சீண்டி விடுவது போன்ற இவ்வாறான வெறுக்கத்தக்க சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த நாட்டில் இன ஐக்கியத்தைப் பேணும் முஸ்லிம் சமூகம் தொடர்பில் மிக மோசமான கருத்துகளை சிங்கள இனவாதிகள் தெரிவித்து வருகின்றனர். இறைவனையும் குர்ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் விமர்சிக்கக் கூடியளவுக்கு இவர்கள் இன்று வளர்ந்துள்ளனர்

எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்த விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களின் பாதுகாப்பையும் அவர்களின் சமய, மத உரிமைகளையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மஹிந்த அரசை முஸ்லிம்கள் வெறுத்து, அவர்களை தோற்கடித்து ஆட்சியிலிருந்து துரத்தியமைக்கு காரணமான காரணிகளை இன்றைய நல்லாட்சி அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் மக்களின் நிலைமையை “சுண்டக்கா கால்பணம்,சுமை கூலி முக்கால் பணம்” என்ற நிலைமைக்கு அரசு கொண்டு செல்லக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -