அன்று திருடப்பட்ட தொலைபேசிக்காக இன்று இரு இளைஞர்கள் கைது...


எப்.முபாரக்-

                        ந்தளாய் தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் பேராறு பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரின் முச்சக்கரவண்டியிலிருந்து அலைபேசியொன்றைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில், இரு இளைஞர்களை, நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைதுசெய்துள்ளதாக கந்தளாய் தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதியன்று, அலைபேசி திருடப்பட்டதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, 19 மற்றும் 21 வயதுகளையுடைய இரு இளைஞர்கள் கைதாகியுள்ளனர்.

அலைதொலைபேசியின் இரகசிய இலக்கத்தைக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையின் பிரகாரம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இருவரையும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -